6 வயது சிறுமியிடம் 60 வயது கொத்தனார் பாலியல் போக்சோவில் கைது

0பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த கொத்தனார் ஆச்சிமுத்து (60), தனது வீட்டின் அருகே இருந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடக்க முயன்றார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆச்சிமுத்துவை பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆச்சிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி