தமிழகம் முழுவதும் இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில், 36 தேர்வு மையங்களில் நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வை 7,276 மாணவர்கள் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 7,207 பேர் பங்கேற்றனர். 69 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வுப் பணியில் 63 பறக்கும் படையினர், 36 முதன்மை தேர்வர்கள், 2 கூடுதல் முதன்மை தேர்வர்கள், 36 துறை அலுவலர்கள், 2 கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் 12 வழித்தட அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.