பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரளி ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பார்வையாளர்களுக்கு தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.