பெரம்பலூர் மாவட்டத்தில் போக்சோ மற்றும் குற்றவியல் வழக்குகளின் புலன்விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற முக்கிய பங்காற்றிய புலன்விசாரணை அதிகாரிகள், மருத்துவர்கள், நீதிமன்ற காவலர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் அரசு வழக்குரைஞர்கள் ஆகியோரின் பணியை பாராட்டி சிறப்பிக்கும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி கி. பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், போக்சோ மற்றும் பல்வேறு முக்கிய வழக்குகளில் துரிதமாகவும் திறம்படவும் செயல்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த உதவிய அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.