பெரம்பலூருக்கு வருகை தந்த நடிகர் விஜய் சேதுபதி

570பார்த்தது
பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் (தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்) பிரமாண்ட நட்சத்திர கலை விழா -2025 பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 

விழாவின் முதல் நாள், தமிழக அரசின் முன்னாள் செயலாளர் செல்வி எஸ். அபூர்வா, கவிஞர் எஸ். இளம்பிறை, திருச்சி ஜமால் முகமது கல்வி குழும நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் காஜா நஜுமுதீன், முன்னாள் மாணவர்கள் சரண்யா சூரியப்பிரகாசம் இயக்குனர் அல்சாஸினோ லைப் சயின்சஸ் மற்றும் நிர்வாக இயக்குனர், ப்ரைன்ட்ரீ கேம்பஸ், நியூடெல்லி அண்ட் இலங்கை மற்றும் நித்தேஷ் புஷ்பராஜ் (இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டிஎவி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆஸ்திரேலியா), சினிமா பிரபலம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் அசல் கோலார், பாடகி பூஜா வெங்கட் மற்றும் பாடகர் சாம் விஷால் ஆகியோர் கலந்து கொண்டனர். மூன்றாவது நாளாக, நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை மமிதா பைஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி