பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிருக்கான கோலப்போட்டி பெரம்பலூர் மாவட்ட அதிமுக அலுவலகம் அருகில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்செல்வன் தலைமையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர். அருணாச்சலம் முன்னிலையில் நடந்த இந்தப் போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு கிரைண்டர், மிக்ஸி, குக்கர் பரிசாக வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மகளிருக்கும் வெண்கல குத்துவிளக்குகள் அதிமுக சார்பில் பரிசளிக்கப்பட்டது.