அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பலூர் வட்டக் கிளையினர், மாநில முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7850 வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி முழுமையான சிகிச்சை தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். சங்கத்தின் வட்டத் தலைவர் கிட்டான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you