பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் உள்ள சக்தி வாய்ந்த காட்டு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீச்சட்டி எடுத்து அலகு குத்துதல் நடைபெற்றது. வாய், இடுப்பு, ஏரோப்ளேன் போன்ற அலகு குத்தி தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். இந்த திருவிழா கடந்த மே 10 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது.