பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2006-2007 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் பள்ளி வளர்ச்சிக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், முன்னாள் தலைமை ஆசிரியை திருமதி வஜ்ராலு, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரு கி. மகேந்திரன், தற்போதைய தலைமை ஆசிரியர் திரு தியாகராஜன் மற்றும் முன்னாள் இந்நாள் உதவி ஆசிரியர்கள் கலந்து கொண்டு வரவேற்புரை, தொகுப்புரை, வாழ்த்துரைகள் வழங்கினர்.