பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில், ஆண்டாள் பக்தர்கள் பேரவை குழு சார்பில் வைகாசி மாதத்தில் 8வது ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை மூலவர்கள் பெருமாள், தாயார் மற்றும் உற்சவர்கள் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, ஆண்டாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை உய்யாளி சேவை, மாலை மாற்றுதல், திருமாங்கல்யதாரணம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் திருக்கல்யாண வைபவம் நிறைவடைந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பட்டாபி தலைமையிலான பட்டாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர்.