பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் மேனகா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 2021 தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், போசன் டிராக்கர் செயலியில் முக அங்கீகாரம் கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், புதிய செல்போன்கள் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைச் செயலாளர் மணிமேகலை உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.