வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா

443பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயிலில், ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேக விழா 5.11.2025 அன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் 1008 கிலோ சமைத்த அன்னம், காய்கறிகள் மற்றும் பழங்களால் சிவபெருமான் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வாழ்க்கையில் அன்னத்திற்கு பஞ்சம் வரக்கூடாது என்பதற்காகவும், ஒரு கோடி சிவலிங்கத்தை தரிசித்த பலன் கிடைப்பதற்காகவும் இந்த அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி