பெரம்பலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹோம சந்திரா தலைமையில் ஆய்வாளர் ஐஸ்வர்யா உள்ளிட்ட மூன்று காவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சார் பதிவாளர் (பொறுப்பு) திருமுருகனிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த முழு விவரங்கள் விரைவில் தெரியவரும்.