போதை ஒழிப்பு எதிர்ப்பு விழிப்புணர்வு 'மினி மாரத்தான் போட்டி

0பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு, போதை ஒழிப்பு எதிர்ப்பு விழிப்புணர்வு 'மினி மாரத்தான்' இன்று நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பு தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயம் வழங்கி பாராட்டப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி