பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் நகைக்கடை உரிமையாளர் தமிழரசன், இரவு கடையை பூட்டிவிட்டு காவலாளி ஜெயராமனை காவல் பணியில் அமர்த்திவிட்டு சென்றார். நள்ளிரவில் நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் காரில் வந்து, காவலாளியை கட்டிப்போட்டு நகைக்கடையின் பூட்டை உடைக்க முயன்றனர். அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், உரிமையாளர் வருவதற்குள் காரில் தப்பிச் சென்றனர். பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.