பெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
பெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட போலீசாரை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் நேற்று பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தம் கேட்டு போராடிய சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அனிபா உள்பட 7 சங்க தலைவர்களை இரவோடு இரவாக கைது செய்ததை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அகஸ்டின், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி