பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கவுள்பாளையம் பகுதியில் குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த தகவல்கள் மற்றும் புகார் எண்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை வீடுகளில் ஒட்டினார். மேலும், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கு பெற்ற குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அனைவரும் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.