பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் இணையதள பண மோசடிகள் குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.