கார்த்திகை முதல் தேதி முன்னிட்டு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

0பார்த்தது
புனித கார்த்திகை மாதமான இன்று, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெரம்பலூர் நகர மற்றும் செஞ்சேரி, பாளையம், அம்மாபாளையம், சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குருசாமியிடம் மாலை அணிந்து தங்களது 48 அல்லது 60 நாள் விரதத்தை சரணம் கோஷம் முழங்க தொடங்கினர். வாலிகண்டபுரம், செட்டிகுளம், பாடாலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், குன்னம், வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். ஒரே நாளில் பெரம்பலூரில் 2000-க்கும் மேற்பட்டோர் விரதத்தை தொடங்கிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி