பெரம்பலூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை

0பார்த்தது
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் நகரில் உள்ள மௌலானா பள்ளிவாசல் மைதானத்தில் மாவட்ட டவுன் பள்ளி இமாம் சல்மான் ஹஜரத் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். மேலும், வடக்கு மாதவி சாலை, செஞ்சேரி, நான்கு ரோடு, துறைமங்கலம் உள்ளிட்ட பள்ளிவாசல்களிலும் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஆடு, மாடு குர்பானி கொடுத்து, இறைச்சிகளை ஏழைகளுக்கு வழங்கினர்.

தொடர்புடைய செய்தி