பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள சின்ன ஏரியில் மீன்பிடிக்க சென்ற 11 வயது சிறுவன் டானிஷ் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தான். உடன் இருந்த சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.