பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (KNMT) கீழ், சென்னை மற்றும் திருச்சி வழித்தடங்களுக்கு கூடுதல் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் ரூ. 372.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.