பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்க வங்கியில் இருந்து அனுமதிக்கப்பட்ட ரூ. 10.35 லட்சம் கடன் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் பயனாளிக்கு இன்று (20.08.2025) வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர்(பொ) கலையரசி காந்திமதி மற்றும் முன்னாள் படை வீரர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.