பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவ மாணவிகள் நேருவின் எழுத்து வடிவில் அமர்ந்து சிறப்பித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.