பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் பகுதியில் உள்ள ஜே. ஆர் கோத்தாரி புட்வேர் லிமிடெட் நிறுவனத்தில், நிர்வாகம் அறிவித்த 12 மணி நேர வேலை நேரத்தை எதிர்த்து தொழிலாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொழிற்சாலை வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்திய அவர்களை, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.