பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில், விவசாய நிலங்கள் வழியாக குவாரி லாரிகளை இயக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிரஷர் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி, பள்ளி செல்லும் பாதையிலும் லாரிகள் சென்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் மாற்றுப் பாதைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் சிறைபிடித்த லாரிகளை விடுவித்தனர். இருப்பினும், மீண்டும் இப்பகுதியில் லாரிகளை இயக்கக் கூடாது என எச்சரித்துச் சென்றனர்.