மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்

1பார்த்தது
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள சில்லக்குடி கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளி கணேசன் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு கொடுத்தார். மேலும், வடக்கு மாதவி கிராமத்தைச் சேர்ந்த முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வீராசாமி சக்கர நாற்காலி கேட்டு மனு அளித்தார். இந்த மனுக்களின் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேற்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில், வீராசாமிக்கு சக்கர நாற்காலியும், கணேசனுக்கு கைகளால் இயக்கக்கூடிய மூன்று சக்கர சைக்கிளும் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. பயனாளிகள் கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி