பெரம்பலூர் மாவட்டம், நெய்குப்பை ஊராட்சியில் மீன்வளத்துறை சார்பில் நடைபெற்றுவரும் மீன் வளர்ப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள தங்கராஜ், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மானியம் பெற்று 5 ஏக்கர் பரப்பளவில் மீன் வளர்த்து, ஆண்டுக்கு 15 டன் மீன் உற்பத்தி செய்து, ரூ.9 லட்சம் நிகர லாபம் ஈட்டுவதாக ஆட்சியரிடம் தெரிவித்தார். கட்லா, ரோகு, மிர்கால் போன்ற மீன் இனங்களை வளர்த்து விற்பனை செய்வதாக அவர் கூறினார்.