பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற நேர்காணலை மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி பார்வையிட்டார். இந்த நேர்காணலில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆட்சியர் மேற்கொண்டார்.