பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட எளம்பலூர் ரோடு, துரைசாமிபுரம் மற்றும் நேரு நகர் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி பிப்ரவரி 5ஆம் தேதியான இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.