பெரம்பலூர் மாவட்டம் "நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்" கீழ் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நடைபயிற்சி மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுவர் பூங்கா அருகே, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் "நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்" கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் நடைபயிற்சியாளர்களின் நடைபயணத்தை இன்று (01.06.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் நடைபயிற்சி மேற்கொள்வதன் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாணவ, மாணவியர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.