பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செந்துறையைச் சேர்ந்த ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் நியமிக்கப்பட்ட அவரை அறிமுகப்படுத்தும் கூட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர்கள் மணிரத்தினம், ஜி. ராஜேந்திரன், மற்றும் மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய மாவட்டத் தலைவர் ராஜேந்திரனை கட்சியினருக்கு அறிமுகம் செய்து, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். பின்னர், கட்சியினர் பேரணியாகச் சென்றனர்.