பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள், பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பேருந்துகளில் கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து எஸ்பி பிரபாகர் வலியுறுத்தினார்.