தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 23 பெண்கள் உட்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.