2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் பெரம்பலூர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி ஆயிரம் முறை தமிழகம் வந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மீட்டிங் போட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் அது எடுபடாது என்றும், திமுக கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.