பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் எதிரில், பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் பதவிகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.