பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 11 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வாரிய கோட்ட, மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் கோட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.