பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலத்தில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையில் நடந்த கூட்டத்தில், குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஐஜேகே சார்பில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.