பெரம்பலூர் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் 'பார்வைக்கோர் பயணம்' என்ற கண்தான விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடைபெற்றது. எஸ்பி அனிதா மற்றும் ராமகிருஷ்ண கல்வி குழுமத்தின் தலைவர் சிவசுப்பிரமணியன், ரோவர் கல்வி குழுமத்தின் தலைவர் வரதராஜன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து லைன் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.