பெரம்பலூர் மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலத்தூர் பிரிவு சாலையில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், இறந்தவர் ஆலத்தூரைச் சேர்ந்த விவசாயி தங்கராசு (56) என தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து, மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.