பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் நடைபெற்று வரும் 10வது புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வில், மதுரை முத்து நடுவராக பங்கேற்ற பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.