தூய்மை பணியளர்களுக்கு   உணவு வழங்கும் திட்டம்

0பார்த்தது
தூய்மை பணியளர்களுக்கு   உணவு வழங்கும் திட்டம்
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் பெரம்பலூர் தனியார் அரங்கில் நேரலையில் பார்வையிட்டனர். அவர்கள் பெரம்பலூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்கள்.

தொடர்புடைய செய்தி