தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு மாநாடு பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு பொறியாளர் சங்கத் தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். மாநாட்டில் பொறியாளர்களுக்கு உரிய காலத்திற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமைச்சர் சிவசங்கரிடம் மனு அளிக்கப்பட்டது.