பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் உள்ள சக்தி வாய்ந்த காட்டு மாரியம்மன் கோவிலின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த மே 10 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழாவில், இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.