பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வேப்பந்தட்டை தாலுகாவில் தமிழ்ச்செல்வனை ஆதரித்து இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "திமுகவின் மிகப்பெரிய சொத்து பொய்தான். அவர்கள் ஊழல் செய்த பணத்தை லண்டனுக்கு அனுப்பி பதுக்கி வைத்து அங்கு தொழிற்சாலைகள் போன்றவைகளில் முதலீடு செய்து வருகின்றனர்" என்று குற்றம் சாட்டினார்.