பெரம்பலூர்: மக்காச்சோளத்திற்கு உரிய விலை கேட்டு நூதனப் போராட்டம்

495பார்த்தது
பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள், மக்காச்சோளத்திற்கு உரிய விலை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கழுத்தில் மக்காச்சோளக் கதிர்களை மாலையாக அணிந்தும், சாலையில் மக்காச்சோளத்தைக் கொட்டி பெண்கள் ஒப்பாரி வைத்தும் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர், இது தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி