பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னக புத்தக பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 10வது புத்தக திருவிழா, 27.02.2026 முதல் 08.03.2026 வரை புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற உள்ளது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.