பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள முத்து கிருஷ்ணா மக்கள் மன்றத்தில், பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பாராட்டி நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.