பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று பணி புறக்கணிப்பு செய்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.