பூலாம்பாடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

516பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மலேசியா தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகு, சீறீப்பாய்ந்து வந்த காளைகளை லாவகமாக மடக்கிப் பிடித்தனர். 14 சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் வீரர்களுக்கும் பீரோ, கட்டில், சேர் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.